நல்லிரவு நாட்டிற்கு வந்த கோட்டாவுக்கு  இவ்வளவு பாதுகாப்பா!

நள்ளிரவில் நாட்டை வந்தடைந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புதிய பாதுகாப்பு பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினரை உள்ளடக்கி இந்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மறுபுறம் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியினால் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பை அடுத்து நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபயவும் தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார்.

அதன் பின்னர் நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டதன் பின்னர் மக்களின் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன.

மேலும், பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு சற்று மீண்டு வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறி 3 மாதங்களின் பின்னர் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleகிளிநொச்சியில் உறக்கத்தில் இருந்த கணவருக்கு மனைவியால் நேர்ந்த கதி; இருவரும் மருத்துவமனையில்!
Next articleமட்டக்களப்பில் மீன் விக்க சென்றவரை தூக்கியடித்த யானை !