கோட்டாபயவை மீண்டும் அரசியலுக்கும் இழுக்கும் முயற்சி : அதற்காக பதவியை விட்டுக்கொடுக்க தயாராகும் பிரபல பெண்!

நாட்டில் இருந்து கடும் எதிர்ப்புகளை தாண்டி நாட்டை விட்டு வெளியேறிய முன்னால் ஜனாதிபதி தற்போது நாட்டினை வந்தடைந்ததையடுத்து மீண்டும் அவரை அரசியலல் இழுக்கும் பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்படடு வருகின்றது.

அந்தவகையில் கோட்டாபய மீண்டும் அரசியலுக்கு வந்தால் தனது நாடாளுமன்ற பதவியை விட்டுத்தருவதாக சீதா அரம்பேபொல தெரிவித்துள்ளார்.

குறித்த பெண் சிறந்த விசேட வைத்தியராக இருந்ததையடுத்து கோட்டாபயவின் வியட்மகவின் உறுப்பினராகவும் செயறபட்டுள்ளார்.

இவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவானதையடுத்து இராஜங்க அமைச்சராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.

இந்நிலையில் முன்னால் ஜனாதிபதியை அரசியலுக்கும் எடுக்கும் பல்வேறு செயல்களில் இவரின் பங்களிப்பாக இதனை தெரிவித்துள்ளார்.

கோட்டாவை அரசசியலுக்கு இழுக்கும் செயல்பாட்டிற்கு அவர் இணக்கம் தெரிவித்தாள் அதற்கு வாய்ப்பளித்து தனது பதவியை விட்டுக்கொடுக்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதனை பொதுஜன பெரமுன கட்சித் தகவல்கள் உறுதிசெய்துள்ளது.

மேலும் பொதுஜன பெரமுன கட்சியின் பெரும்பான்மையினரும், ராஜபக்சர்களும் கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.