செல்ஃபி எடுக்க சென்றபோது ஏற்பட்ட அசம்பாவிதம்… இளைஞன் பரிதாபமாக பலி!

ஹல்துமுல்லை உடவேரிய தோட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சியில் செல்ஃபி எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் நேற்று தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இரண்டு இளைஞர்கள் நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற போது அவர்களில் ஒருவர் செல்ஃபி எடுக்கச் சென்று நீர்வீழ்ச்சியில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்வீழ்ச்சியில் இருந்து சுமார் 200 மீற்றர் ஆழத்தில் உயிரிழந்தவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குருதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Previous articleமானை நாயிடமிருந்து காப்பாற்றிய மக்கள்!
Next articleஅரசு பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!