அரசு பாடசாலை மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்!

2023ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்காக அரசாங்கம் 16,483 மில்லியன் ஒதுக்கியுள்ளதுடன், 45 வீதமான பாடப்புத்தகங்களை அரச அச்சக கூட்டுத்தாபனத்தினால் அச்சிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஐம்பத்தைந்து சதவீத பாடப்புத்தகங்கள் தனியாரால் அச்சிடப்படும் என குருநாகல் மாவட்ட முதுநிலைக் கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம். பாலசூரிய தெரிவித்தார்.

குருநாகல் மாகாண கல்வி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற குருநாகல் மாவட்ட பாடசாலை அதிபர்கள் கூட்டத்தில் பாலசூரிய, “அடுத்த கல்வியாண்டு 2023க்கு முன்னர் மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணியை துரிதப்படுத்துமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமயந்த அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.