உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முதல் இடம் பிடித்த மாகாணம்!

2021 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் கிழக்கு மாகாணம் முதலாம் இடத்தையும் வடமாகாணம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளன.

2021ஆம் ஆண்டுக்கான உயர் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டன. மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெறுவதற்கான விகிதத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் 9 மாகாணங்களில் கிழக்கு மாகாணத்தில் 66% மாணவர்கள் முதலிடத்தையும், ஊவா மாகாணத்தில் 65.86% மாணவர்கள் இரண்டாம் இடத்தையும், 65.26% மாணவர்கள் வடமாகாணத்தில் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர். .

மேலும், வடமேல் மாகாணம் 64.07 வீதமும், மத்திய மாகாணம் 63.84 வீதமும், மேல் மாகாணம் 63.31 வீதமும், சப்ரகமுவ மாகாணத்தில் 62.84 வீதமும், தென் மாகாணத்தில் 62.11 வீதமும், வடமத்திய மாகாணத்தில் 60.10 வீதமும் முறையே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.