யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்த்தர் : வெளியான காரணம்!

யாழில் குடும்பஸ்தர் ஒருவருக்கு முள்ளு குத்தியதால் பரிதாபமாக உயரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவவமனது யாழ்ப்பாணம் – அனலைதீவு 7ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்த நபர் குறித்த பகுதியையுடைய குமாரசாமி தம்பிராசா (வயது – 70) என்பவர் என பொலிஸாரின் முதற்கடட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவருக்கு கடந்த 31ஆம் திகதி காளில் முள் குத்தியுள்ளதையடுத்து கால் கடும் வலியினை ஏற்படுத்தியதையடுத்து சிகச்சைகக்காக அனலைதீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அங்கிருந்து ஊர்காவவற்துரை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அதிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இவ்வாறு சிகிச்சைச பெற்றுவந்தையடுத்து நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பான இறப்பு விசாரணைகளை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.

மேலும் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் இன்று உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleஉயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் முதல் இடம் பிடித்த மாகாணம்!
Next articleயாழில் மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன்! : 09 நாட்களின் பரிதாமாக உயிரிழந்த சோகம்!