மின்சார சபை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான பிரதான கட்டமைப்பு இம்மாத இறுதிக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார சபையின் சீர்திருத்தக் குழுவின் முன்மொழிவுகள் தொடர்பில் இன்று (04-09-2022) கலந்துரையாடும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதேவேளை, அரசியல் கட்சிகள் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவும் அடுத்த வாரம் கூடவுள்ளதாக அமைச்சர் விஜேசேகர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleமீண்டும் அதிகரிக்கிறது எரிபொருள் நிலையங்களில் வரிசை !
Next articleகாலையில் எடுத்துகொள்ளும் உணவினால் ஏற்படும் ஆபத்துக்களும் அதன் பயண்களும்!