கடூழிய சிறைத்தண்டனையில் இருந்து விடுதலையாகி திரைப்படங்களில் நடிக்க தயாராகும் ரஞ்சன்!

கொடூர சிறை தண்டனை அனுபவித்து வந்த பிரபல திரைப்பட நடிகர் ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் படங்களில் நடிக்க தயாராகி வருகிறார்.

ஆறு புதிய படங்களில் நடிக்க அழைப்பு வந்துள்ளது என்றார்.

மேலும் சில படங்களில் நடிப்பது குறித்தும் பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளன என்றார்.

ஒரு கட்டத்தில் தனது சிவில் உரிமைகளை மீளப் பெற முடியும் என்ற நம்பிக்கையில் காத்திருப்பதாக ரஞ்சன் ஞாயிற்றுக்கிழமை சிங்களப் பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்தார்.

இலங்கையின் முன்னணி திரை நட்சத்திரங்களில் ரஞ்சனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleயாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதி!
Next articleகோட்டாபய ராஜபக்சவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றை வழங்க முடிவு !