நடிகர் பிரசாந்த் மீது இலங்கை பெண் பண மோசடி முறைப்பாடு !

நடிகர் பிரசாந்த் மீது இலங்கையைச் சேர்ந்த சுவிஸ் விமான நிலைய ஊழியர் ஒருவர் பண மோசடி புகார் அளித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் சுவிஸ் விமான நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

பெண்ணிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்ததாக நடிகர் பிரசாந்த் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அந்த பெண் சொல்வதில் உண்மையில்லை என்றும், அவரது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்ட சதி என்றும் பிரசாந்த் தரப்பில் விளக்கம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும் இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அந்த பெண்ணின் புகார் குறித்து எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Previous articleகோட்டாபய ராஜபக்சவிற்கு தேசியப் பட்டியல் ஆசனம் ஒன்றை வழங்க முடிவு !
Next articleயாழ்.தொண்டைமானாற்றில் முதலைகள் அபாயத்தை தவிர்க்க இரும்பு வேலி அமைப்பு..!