பிரான்ஸிலிருந்து யாழிற்கு வந்த இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம்!

பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இளம் குடும்பஸ்தர் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர் யாழ். தென்மராட்சி இடைக்குறிச்சி, வரணியைச் சேர்ந்த 34 வயதான ஏ.அருள்குமார் என தெரியவந்துள்து.

பிரான்சில் வசித்து வந்த இவருக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்தது.

சில தினங்களில் மீண்டும் வெளிநாடு செல்லத் தயாராக இருந்த நிலையில், கடந்த சனிக்கிழமை (03) மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் கம்பத்தில் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

படுகாயமடைந்த அவர் வரணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று (05-09-2022) காலமானார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ்.போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

Previous articleவெளிநாட்டில் இருந்துவந்த மனைவி தாயார் வீட்டில் தங்கியதால் ஏற்பட்ட விபரீதம்!
Next articleஇலங்கைக்கு 400 கோடி டொலர்கள் நிதியுதவி அளிக்கும் பிரபல நாடு!