யாழில் மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்!

யாழ்.மாவட்டம் – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மூன்று உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த கைது இன்று (05-09-2022) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பளை பிரதேசத்திற்குட்பட்ட அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு இடம்பெறுவதாக பளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மூன்று உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்படவுள்ளதாகவும், எதிர்வரும் 07 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்ட நீதவான் மண் ஏற்றிய உழவு இயந்திரங்களை ஆஜர்படுத்தவுள்ளதாக பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Previous articleஇலங்கையில் உணவு இல்லாமல் தவிக்கும் 55 இலட்சம் பேர்! சம்பிக்க தெரிவிப்பு!
Next articleபுத்தளத்தில் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த யாசகர்!