புத்தளத்தில் ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்த யாசகர்!

புத்தளம் மாவட்டம் – முந்தல் பகுதியில் ரயிலில் மோதி யாசகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று (05-09-2022) இடம்பெற்றுள்ளது.

இன்று மாலை புத்தளத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பயணிகள் ரயிலில் மோதி யாசகர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி யாசகர் முந்தலுக்கும் மங்கள சம்ஸ்ராவுக்கும் இடைப்பட்ட பகுதியில் புகையிரத பாதைக்கு அருகில் நின்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாசகரின் சடலம் ரயில்வே ஊழியர்களால் முந்தல் ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த யாசகர் அடையாளம் காணப்படவில்லை என முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை சுற்றிவளைத்து பிடித்த பொலிஸார்!
Next articleயாழில் பல மில்லியன் கணக்கில் இழப்புக்களை சந்தித்த ஹோட்டல் : வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் மோசமான செயல்!