யாழில் பல மில்லியன் கணக்கில் இழப்புக்களை சந்தித்த ஹோட்டல் : வெளிநாட்டிலிருந்து வந்த நபரின் மோசமான செயல்!

பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று வெளிநாட்டவரின் மோசமான செயலால் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் தினமும் குடிபோதையில் ஈடுபடுவதுடன், அங்கு தங்கியிருப்பவர்களிடம் அடிக்கடி பிரச்சினைகளில் ஈடுபடுவதும் தெரியவந்துள்ளது.

ஆரம்பத்தில் குறித்த ஹோட்டலில் தங்கச் சென்றவர் தொடர்ந்து சில நாட்கள் தங்கியிருந்து பின்னர் சில பிரச்சினைகளை உருவாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹோட்டல் உரிமையாளருக்குச் சொந்தமான வேறொரு இடத்தில் தங்கியிருந்தவர், திடீரென ஒருநாள் தனது பொருட்களை வீசிவிட்டு அங்கேயே தங்கியுள்ளார்.

எனினும் அவர் சென்ற சில மணித்தியாலங்களில் அப்பகுதியில் தீ பரவி ஹோட்டல் உரிமையாளர்களின் பெறுமதியான பொருட்கள் மற்றும் அறை முற்றாக எரிந்து சாம்பலானது. இதன் காரணமாக இரண்டு மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை இழந்துள்ளதாக ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில வருடங்களாக நாட்டில் ஏற்பட்டுள்ள சுற்றுலாத்துறை கடும் பின்னடைவு மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு ஹோட்டல்களை நடத்தி வருவதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குடியிருப்பாளர் தனது ஹோட்டலை களங்கப்படுத்தவும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தவும் இதுபோன்ற நாசவேலைகளைச் செய்ததாக உரிமையாளர் குற்றம் சாட்டியுள்ளார்.