2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

ராமநகர் மாவட்டம், மாகடி தாலுக்கா ஹோசபாளையா கிராமத்தைச் சேர்ந்தவர் லோகேஷ். இவரது மனைவி ரூபா (வயது 30).

விவசாயியான லோகேஷ், மாகடி தாலுக்கா விவசாயிகள் சங்கத் தலைவராகவும் உள்ளார். இவர்களுக்கு ஹர்ஷிதா (6), ஸ்பூர்த்தி (4) என்ற 2 மகள்கள் இருந்தனர். இந்நிலையில் ரூபாவுக்கும் லோகேஷ்க்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று காலை கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து லோகேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றார்.

குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்த ரூபா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்தால் தன் குழந்தைகளின் கதி என்னவாகும் என்று எண்ணி அவர்களையும் கொல்ல முடிவு செய்தார்.

அதன்படி உணவில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) கலந்து குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் அந்த உணவை சாப்பிட்டார். இதில் தலையில் விஷம் ஏறியதில் 3 பேரும் வீட்டில் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleசிறுநீர் கழிக்கும் போது நிகழ்ந்த துயரம் :அந்தரங்க உறுப்பை கோடாரியால் வெட்டிய நபர்!!
Next articleநன்றாக படிக்கிறான் என மாணவனை விஷம் வைத்து கொன்ற சக மாணவியின் தாய் : நெஞ்சை உறைய வைத்த சம்பவம்!!