யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு : பின்னர் நடந்த சோகம்!

யாழில் நேற்றையதினம் வாள்வெட்டு சம்பவம் ஒன்று நடந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இச்சம்பமானது மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் பசுமை ஞாபகார்த்த வைத்தியசாலையின் பின் வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் இடம்பெற்றுள்ளது.

நான்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர் கொண்ட வன்முறைக் கும்பல், வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து, வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஹேய்ஸ் வாகனங்களின் கண்ணாடிகளை வாள்களால் வெட்டினர்.

மேலும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் முன்பக்க வாயிலை வாளால் வெட்டினர்.

இதனிடையே வீட்டின் மீதும் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோடினர்.

இருப்பினும் வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

மேலும், வீட்டாரால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Previous articleபாடசாலை மாணவியை இரகசியமாக காணொளி எடுத்தவர் கைது!
Next articleரசிகர்களை ஷாக்காக்கிய நம்மட லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்!