பிரபல பாடசாலை வகுப்பறையில் பீர் குடித்த சிறுமிகள் : அதிர்ச்சியான பெற்றோர்கள்!

பிரபல பாடசாலை மாணவி ஒருவர் வீட்டில் இருந்து கொண்டு வந்த பீரை சக மாணவர்களுக்கு குடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் காலி மாவட்டத்தில் ரூகடவல நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவரே இவ்வாறு வீட்டில் இருந்து பீர் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, ஆசிரியர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மாணவர்கள் பீர் அருந்தியிருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், பள்ளி நேரத்தில் மாணவி எப்படி பள்ளிக்கு பீர் கொண்டு வந்து குடித்தார்? பள்ளி நிர்வாகம் என்ன செய்கிறது என குழந்தைகளின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Previous articleயாழில் விபத்தில் பறிபோனது இளைஞனின் உயிர்.!
Next articleபெண்ணை தகாத உறவுக்கு அழைத்த யாழ் பிரதிநிதி!