பெண்ணை தகாத உறவுக்கு அழைத்த யாழ் பிரதிநிதி!

பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபடுமாறு பெண் ஒருவரை அழைத்து 50,000 ரூபா இலஞ்சம் கேட்ட குற்றச்சாட்டில் இருவரையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் ஹர்ஷன கெகுணவெல இன்று (07) உத்தரவிட்டுள்ளார்.

ஆளும் கட்சி ஒன்றின் யாழ். மாவட்ட அமைப்பாளர் உட்பட இருவர் லஞ்சம் மற்றும் ஊழல் புகார்களை விசாரிக்கும் ஆணையத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையிலும் இந்த உத்தரவு வந்துள்ளது.

குறித்த பெண்ணிடம் 50 ஆயிரம் ரூபாவுடன் வருமாறு அறிவிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அத்துடன், வெளியிலுள்ள உணவகம் ஒன்றில் குறித்த பெண்ணிடம் பணம் பெற முற்பட்ட போதே சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு சபைக்கு தெரிவித்துள்ளது. இந்நிலையிலேயே சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது.

Previous articleபிரபல பாடசாலை வகுப்பறையில் பீர் குடித்த சிறுமிகள் : அதிர்ச்சியான பெற்றோர்கள்!
Next articleமூன்று இளம் பிக்குகளுக்கு பெளத்த மதகுருவால் நேர்ந்த கொடூரம்!