எதிர்ப்பாரத விதமாக தந்தையின் வான் சில்லில் சிக்குண்டு 2 வயது குழந்தை பலி!

திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாயன்மார் திடல் பகுதியில் தந்தை ஓட்டிச் சென்ற வேன் ஒன்றுடன் மோதியதில் இரண்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

திருகோணமலை – தம்பலகாமம் பகுதியைச் சேர்ந்த ரஜிந்தன் நட்சத்திரா (வயது 02) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தந்தை வானத்தை பின்னால் இழுத்த போது சிறுமி வழுக்கி வானத்தில் விழுந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் மயக்க மருந்து கொடுத்து நூதன முறையில் திருட்டு! வடமராட்சியில் சம்பவம்!
Next articleயாழ்.வடமராட்சி ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய திருவிழா!