யாழில் சட்டவிரோத மணல் கடத்தல்: சாரதி கைது!

நேற்று (07) சட்டவிரோதமான முறையில் டிப்பர் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட கடல் மண் அச்சுவேலி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

பளை பகுதியில் இருந்து அச்சுவேலி நோக்கி வந்த டிப்பர் வாகனத்தை சோதனையிட்ட போது அனுமதிப்பத்திரம் இன்றி மண் ஏற்றி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த டிப்பர் வாகனம் வீரவாணி பகுதியில் மறித்து சோதனையிடப்பட்டுள்ளது.

இதன் போது அனுமதியின்றி கடல் மண்ணை ஏற்றிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

புத்தூர் கலமதி பகுதியைச் சேர்ந்த டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மல்லறும் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.நேற்று (07) சட்டவிரோதமான முறையில் டிப்பர் வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட கடல் மண் அச்சுவேலி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

பளை பகுதியில் இருந்து அச்சுவேலி நோக்கி வந்த டிப்பர் வாகனத்தை சோதனையிட்ட போது அனுமதிப்பத்திரம் இன்றி மண் ஏற்றி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

அச்சுவேலி பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த டிப்பர் வாகனம் வீரவாணி பகுதியில் மறித்து சோதனையிடப்பட்டுள்ளது.

இதன் போது அனுமதியின்றி கடல் மண்ணை ஏற்றிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

புத்தூர் கலமதி பகுதியைச் சேர்ந்த டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட டிப்பர் வாகனம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மல்லறும் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.