கிளிநொச்சியில் அரச சீல் மதுபான விற்பனை : இருவர் கைது !

கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி அரச முத்திரையிடப்பட்ட மதுபானங்களை விற்பனை செய்த மற்றும் வைத்திருந்த இருவருக்கு 40 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் முன்னதாக ஒருவரை கைது செய்த பளை பொலிஸார், அவரை கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (07) ஆஜர்படுத்தியதுடன் குறித்த நபருக்கு 15,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரச முத்திரையிடப்பட்ட 540 மில்லி மதுபானத்தை விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, ​​25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous articleயாழில் பாணின் விலையை அதிகரியுங்கள்; யாழ் மாவட்ட வெதுப்பக உரிமையாளர் சங்க தலைவருக்கு மிரட்டல்!
Next articleவவுனியாவில் போதை ஊசியைப் பயன்படுத்தும் சிறுவர்கள் அதிகரிப்பு!