யாழில் மரத்திலிருந்து வீழ்ந்த நபருக்கு நேர்ந்த சோகம்!

யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான் வீதியில் மாதகல் பகுதியில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் நேற்று பிற்பகல் 6 மணியளவில் மரத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

மரக்கிளைகளை வெட்டுவதற்காக ஏறும் போது மரத்திலிருந்து கீழே விழுந்த நபர் உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, நோயாளியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்சுக்கு போன் செய்தபோதும், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பாக்கியநாதன் ஜோசப் இமானுவேல் (வயது 66) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleதாயை துன்புறுத்திய தந்தையை கொலை செய்த மகன் : பொலிஸார் விசாரணை!
Next articleயாழில் இடம்பெறவுள்ள மிக பெரும் போராட்டமும், பேரணியும்!