தாய் கண்முன் ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்த மகன் : அரங்கேறிய கொடூர சம்பவம்!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காமராஜ் நகரை சேர்ந்தவர் விஜயன் மகன் விஷ்ணு (வயது 24). இவர் நாயை வளர்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டின் அருகே உள்ள இறைச்சிக் கடையில் வேலை செய்யும் முத்து (வயது 37) என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த கோழியை விஷ்ணு வளர்த்து வந்த நாய் கடித்து கொன்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் முத்து இன்று காலை விஷ்ணுவின் வீட்டிற்கு சென்றார். தாய் லெட்சுமிடம் விஷ்ணு வாக்குவாதம் செய்தார். மேலும் தனது கோழியை கொன்றதற்காக ரூ.1000 தருமாறு கூறிவிட்டு சென்று விட்டார்.

அதன்பிறகு விஷ்ணுவிடம் தனது தாய் முத்து வந்து சென்றதாக கூறினார். விஷ்ணு, லட்சுமி இருவரும் முத்து வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு விஷ்ணுவுக்கும் முத்துக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த முத்து, மாட்டின் தோலை உரிப்பதற்காக வீட்டில் வைத்திருந்த கத்தியை எடுத்து விஷ்ணுவின் வயிற்றில் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த விஷ்ணு ரத்த வெள்ளத்தில் சரிந்தார். மகன் விஷ்ணு கண்முன்னே ரத்தம் கொட்டியதை பார்த்து அவரது தாய் கதறி அழுதார்.

இதையடுத்து விஷ்ணுவை சிகிச்சைக்காக நத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட விஷ்ணு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கண்முன்னே மகன் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleதொலைக்காட்சியை ஆஃப் செய்த மாமியரின் கையை கடித்து குதறிய மருமகள் !
Next articleயாழில் விடுதியில் பெண்ணுடன் உல்லாசமாக இருக்கும்போது சிக்கிய பிரான்ஸ் மாப்பிள்ளை : நயப்புடைத்த வீட்டார்!