வரலாற்று சிறப்பு மிக்க யாழ் செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்று மிக சிறப்பாக இடம்பெற்ற தேர்த்திருவிழா!

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொன்மனாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மகோத்ஸவ தேர்திருவிழா இன்று (09) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

செல்வ சந்நிதி முருகனை பக்தர்கள் சூழ்ந்த தருணம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. செல்வச் சந்நிதி முருகன் ஆலயம் ஈழத்தில் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயங்களில் ஒன்றாகும்.

சந்நிதி கோயிலின் வருடாந்த மஹோத்ஸவம், ஆவணி மாத பூரணைக்கு முந்திய அமாவாசை நிறைவடையும் போது, ​​ஆவணி மாதம் தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவு பெறும்.

இங்கு நடைபெறும் கொடியேற்றம் ஆகம பாரம்பரியம் கொண்ட மற்ற கோயில்களைப் போல் இல்லாமல் தனிச்சிறப்பு வாய்ந்தது.

இங்கு கொடிமரம் இல்லை. மேலும் திருவிழா காலங்களில் சுவாமி வீதிவலம் வந்து சிறப்பு அலங்காரத்துடன் கோவிலை வலம் வருகிறார்.

இந்நிலையில், செல்வ சந்நிதி முருகன் இன்று பக்தர்களுக்கு காட்சியளித்து, தன்னை நாடி வந்த பக்தர்களுக்கு காட்சியளித்தது அடியார்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.