பருப்பு, வெள்ளை சீனி மற்றும் உளுந்து ஆகியவற்றின் விலைகள் குறைப்பு!

சதொசவில் விற்பனை செய்யப்படும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசி, சிவப்பு பருப்பு, வெள்ளை சீனி மற்றும் உளுந்து ஆகியவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சதொச தலைவர் தெரிவித்தார்.

இந்த விலைகள் இன்று (09) முதல் குறைக்கப்படும் என சதொச நிறுவனத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி கிலோ ஒன்றின் விலை 210 ரூபாவிலிருந்து 185 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் வெள்ளைப்பருப்பு கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவாக இருந்த விலை 194 ரூபாவாகவும், சிவப்பு பருப்பு கிலோ ஒன்று 135 ரூபாவாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

Previous articleவரலாற்று சிறப்பு மிக்க யாழ் செல்வ சந்நிதி ஆலயத்தில் இன்று மிக சிறப்பாக இடம்பெற்ற தேர்த்திருவிழா!
Next article203 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்ற இலங்கை!