வாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!

நாகவில்லு பகுதியில் வாகன விபத்தில் சிக்கிய ஒருவர் படுகாயமடைந்த நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் 2ஆம் திகதி நாகவில்லு பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அவர்களில் எம்.இமாத் என்ற இளைஞன் குருநாகல் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலதிக சத்திரசிகிச்சைகளுக்காக குருநாகலிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இன்று (09-09-2022) மாலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞரின் ஜனாஸா கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் ஜனாஸா உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

நாகவில்லு பிரதேசத்தில் பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிள் கெப் வண்டியுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

Previous articleதேர்வுத் துறை இணையதளத்தை ஹேக் செய்த பிரபல பாடசாலை மாணவர் !
Next articleQR குறியீடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!