QR குறியீடு தொடர்பில் எரிசக்தி அமைச்சர் வெளியிட்ட புதிய தகவல்!

வாகனங்களுக்கு எரிபொருளை ஏற்றிய பின்னர் எரிபொருள் நிரப்பு நிலைய குறியீட்டு இலக்கம் குறுஞ்செய்தி மூலம் உரிய நபருக்கு அனுப்பி வைக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

வாகனம் அல்லது எரிபொருள் தேவைக்கு QR குறியீடு அமைப்பும் தயாராக உள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக ஜெனரேட்டர், புல் வெட்டும் இயந்திரம் உள்ளிட்ட பிற இயந்திரங்களுக்கான க்யூஆர் குறியீடு அமைப்புக்கான பதிவு முறை பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

Previous articleவாகன விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!
Next articleயாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!