யாழில் வவுனியா மாணவர்கள் சாதனை!

யாழ்ப்பாணம் கந்தர்மடம் சைவப்பிரகாச பாடசாலையில் நடைபெற்ற மாகாண மட்ட பளுதூக்கும் போட்டியில் வவுனியா – நெளுக்குளம் கலைமலை மகா வித்தியாலய மாணவர்கள் பதக்கங்களை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 49 கிலோ எடைப் பிரிவில் நா. நகிந்தன் 82 கிலோ எடையை தூக்கி தங்கம் வென்றார். ஜதுர்சன் 55 கிலோ எடைப் பிரிவில் 97 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். சுபிஸ்கரன் 59 கிலோ எடைப் பிரிவில் 100 கிலோ எடை தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார். சருஜன் 55 கிலோ எடைப் பிரிவில் 80 கிலோ எடையைத் தூக்கி 20 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 5வது இடத்தைப் பிடித்தார். 65 கிலோ எடைப் பிரிவில் கோகுலன் 125 கிலோ எடை தூக்கி சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், தங்கப்பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Previous articleயாழில் இடம்பெற்ற விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்!
Next articleயாழில் சிறுவர்களை வைத்து தொழில் நடத்திய விடுதி இழுத்து மூடப்பட்டது.