தாயையும் மகளையும் கூறிய ஆயுததத்தால் தாக்கிய நபர் வௌியான காரணம்!

பதுளை, கனல்பின்வத்த மற்றும் ஹிகுருகமுவ பிரதேசத்தில் பெண் ஒருவரும் அவரது மகளும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணும் அவரது 2 மகள்களும் பிரதேசத்திலுள்ள தோட்ட வீடொன்றில் வசித்து வந்ததாகவும், அவர்கள் இன்று (10) காலை தாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 83 வயதான தாயும் 55 வயதுடைய மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெட்டுக்காயங்களுக்கு உள்ளான 62 வயதுடைய மகள் ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார், சந்தேக நபர்களை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleயாழில் சிறுவர்களை வைத்து தொழில் நடத்திய விடுதி இழுத்து மூடப்பட்டது.
Next articleகொழும்பு கோல்பேஸினை விட மிக மோசமான யாழ் ஆரியகுளம்!