பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை!

பிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கபிலனின் மகள் 28 வயதான துரிகை இதனைச் செய்வதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாடலாசிரியர் கபிலன் பொன்னியின் செல்வன், பிசாசு, சர்ப்பட்ட பரம்பரை உள்ளிட்ட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் துரிகை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பெற்றோர் வற்புறுத்தியதால் துரிகை தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Previous articleகொழும்பு கோல்பேஸினை விட மிக மோசமான யாழ் ஆரியகுளம்!
Next articleஜனாதிபதி ரணிலின் அதிரடி முடிவு : வெளியான அறிக்கை !