ஜனாதிபதி ரணிலின் அதிரடி முடிவு : வெளியான அறிக்கை !

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட 37 அரசாங்க அமைச்சுக்களுக்கு கடந்த 8ஆம் திகதி நிதி ஒதுக்கப்படுவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து அமைச்சுக்களுக்கான செயலாளர்களை நியமிப்பதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க அமைச்சுக்களின் கீழ் வரும் செயற்பாடுகளை ஒருங்கிணைக்க அமைச்சரவை அமைச்சின் சிரேஷ்ட மேலதிக செயலாளரை ஈடுபடுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், மக்கள் மீதான சுமையை குறைக்கும் அரசாங்கத்தின் மற்றுமொரு நடவடிக்கை எனவும் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

எனவே வாகனங்கள் உட்பட பல செயலக சிறப்புரிமைகளுக்கான செலவை அரசாங்க அமைச்சுக்கள் ஏற்க வேண்டியதில்லை என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அமைச்சரவை அமைச்சின் ஊழியர்களின் தேவைகள் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள் ஊடாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் புதிய பதவிகளை உருவாக்குவதற்கான கோரிக்கைகளை முன்வைக்க வேண்டாம் எனவும் ஜனாதிபதியின் செயலாளர் செப்டம்பர் 09ஆம் திகதி அனைத்து செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.

எனினும் புதிய அரச அமைச்சர்கள் தமக்கான சொகுசு வாகனங்கள் மற்றும் ஏனைய சலுகைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒவ்வொரு இராஜாங்க அமைச்சருக்கும் தலா எட்டு வாகனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Previous articleபிரபல திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூக்கில் தொங்கி தற்கொலை!
Next articleபாடநூல் அச்சிடுவதற்கு இந்தியாவிடம் கடன்வாங்கிய இலங்கை !