யாழில் போதைப்பொருள் பாவித்ததால் அக்கா என தெரியாமல் சீரழித்த சகோதரன் : விபரீத முடிவை எடுத்த இளம் பெண்!

யாழில் போதைப்பொருள் பாவித்ததில் அக்காவை சகோதரன் வன்புணர்வுக்கு உள்படுத்தியதனால் மனவிரக்தியில் சகோதரி உயரை மாய்த்துக்கொண்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

20 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

போதைக்கு அடிமையான மூத்த சகோதரன் தனது சகோதரியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

விரக்தியடைந்த சகோதரி, அந்த சம்பவத்தை குரல் பதிவு கருவியில் பதிவு செய்து நண்பருக்கு அனுப்பிவிட்டு உயிரை மாய்த்துக் கொண்டார்.

சகோதரரை போலீசார் கைது செய்து வாக்குமூலம் பெற்றுள்ளனர். அந்த அறிக்கையில் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை, யாளியில் இளைஞர்கள் மத்தியில் ஹெரோயின் உள்ளிட்ட கொடிய போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதோடு, பல்வேறு சமூகவிரோதச் செயல்கள் அதிகரித்து உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன.

Previous articleமீண்டும் பாணின் விலை உயர்வு!
Next articleயாழில் சுருட்டு புகைப்பதற்கு மூட்டிய தீக்குச்சி ஆடையில் பற்றிக் கொண்டதில் படுகாயமடைந்த மூதாட்டி மரணம்!