யாழில் மரத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி கோர விபத்து! இளைஞர் பலி!

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் க.சரவணபவன் (வயது 32) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து திருநெல்வேலி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது கந்தர்மடம் பகுதிக்கு அருகில் மரத்தில் மோதி மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக குறித்த இளைஞன் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இளைஞர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் வாகனத்தை அதிவேகமாக ஓட்டியதே மரணத்திற்கு காரணம் என தடயவியல் மருத்துவ அதிகாரி நமவசிவாயம் பீரேம்குமார் தெரிவித்தார்.

Previous articleயாழில் சுருட்டு புகைப்பதற்கு மூட்டிய தீக்குச்சி ஆடையில் பற்றிக் கொண்டதில் படுகாயமடைந்த மூதாட்டி மரணம்!
Next articleநாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு : பொருட்களை வாங்கும் போது மிகவும் அவதானம்!