நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு : பொருட்களை வாங்கும் போது மிகவும் அவதானம்!

இலங்கையில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களை குறைந்த அளவில் உற்பத்தி செய்து மோசடி செய்யும் வர்த்தகம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிஸ்கட், சவர்க்காரம், பற்பசை, மிளகாய் தூள், மசாலா தூள் போன்ற பொருட்களில் இந்த மோசடி இடம்பெறுவதாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே தெரிவித்துள்ளார்.

எடையைப் பொருட்படுத்தாமல் விலை குறைவாக இருப்பதாகக் கருதும் வாங்குபவர்கள் பணத்தை இழக்கிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

சில உற்பத்தியாளர்கள் இந்த தயாரிப்புகளை தள்ளுபடியாக விளம்பரப்படுத்தி குறைந்த விலையில் விற்பதாகவும், ஆனால் சாதாரண விலையை விட அதிக விலைக்கு விற்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

சில வகை பிஸ்கட்டுகள் 50, 60, 70 கிராம் போன்ற சிறிய பாக்கெட்டுகளில் தயாரிக்கப்பட்டு, குறைந்த விலை எனக் கூறி சந்தையில் வெளியிடப்பட்டு, நுகர்வோருக்கு பயனளிக்கும் வகையில் உற்பத்தியாளர்கள் விளம்பரம் செய்கின்றனர்.

இவ்வாறு பாவனையாளர்களை ஏமாற்றி சவர்க்காரம், மிளகாய் பொதி போன்ற மசாலாப் பொருட்களையும் விற்பனை செய்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.