உயர்தர பரீட்சை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார் .

இது தொடர்பாக அவர் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

உயர்தரப் பரீட்சையில் முதல் தடவை, இரண்டாம் தடவை, மூன்றாம் தடவை சித்தியடையாத மாணவர்கள் இது தொடர்பில் தினமும் கோரிக்கைகளை முன்வைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கோவிட் காரணமாக மாணவர்கள் நீண்ட காலம் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

2021 உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி மூன்று மாதங்களுக்குப் பின்னர் 2022 ஆம் ஆண்டுக்கான பரீட்சையை நடத்துவது எந்த வகையிலும் பொருத்தமானதல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாணவர்களுக்கு போதிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டுமென விமல் வீரவன்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை தோல்வியடைந்த மாணவர்களுக்கு நீதி வழங்கும் வகையில் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரியுள்ளார்.

Previous articleநாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு : பொருட்களை வாங்கும் போது மிகவும் அவதானம்!
Next articleயாழில் வாளுடன் கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்கள்!