யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்த்தர் பலி!

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் புளியங்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் 49 வயதுடைய பஞ்சநாதன் குகேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleயாழில் பூட்டி இருந்த வீட்டில் 16 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச்சென்ற நபர்!
Next articleயாழில் காதலனால் ஆசிரியர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு!