யாழில் போதைப்பொருளை நுகர்ந்து பார்த்த கொழும்பு நபர் கைது!

யாழ்ப்பாணம் மானிப்பாய் சுதுமலை பகுதியில் வைத்து கொழும்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருளை உட்கொண்ட நால்வரையும் இன்று (14) அதிகாலை 2 மணியளவில் யாழ் மாவட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 61 கிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. யாழ்.மாவட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நால்வர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மானிபாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஒருவர் கொழும்பைச் சேர்ந்தவர்கள்.

கைது செய்யப்பட்டவர்கள் போதைப்பொருள் வியாபாரிகள் என சந்தேகித்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Previous articleயாழில் காதலனால் ஆசிரியர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு!
Next articleசெல்போன் வெடித்தில் 8 மாத பெண் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்!