யாழில் கோவிலை சுற்றி வழைத்த விசேட அதிரடிப்படையினர் : வெளியான காரணம்!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை – பாப்பாவி பகுதியில் நேற்றிரவு விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 11 வாள்களுடன் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுப்வி பிரதேசத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் பல்வேறு வடிவங்களில் செய்யப்பட்ட வாள்கள் காணப்படுவதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து அங்கு விரைந்த அதிரடிப்படையினர் கோவிலை சுற்றி வளைத்து சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்து பல்வேறு வடிவங்களில் தயாரிக்கப்பட்ட 11 வாள்களை மீட்டனர்.

22 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட வாள்களும், கைது செய்யப்பட்ட இளைஞரும் வட்டுக்கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, குறித்த இளைஞனின் தந்தை கோவிலின் பூசாரி எனவும், அதற்காக பயன்படுத்தப்பட்ட வாள் மற்றும் வாள்களை வைத்து விளையாடும் ஜோசியக்காரர் எனவும் இளைஞனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous articleஇலங்கை வீரர்கள் வென்றமைக்கு நாமலே காரணமாம்!
Next articleடொலர் தட்டுப்பாட்டால் காத்துகிடக்கும் எரிபொருள் கப்பல்கள்!