டொலர் தட்டுப்பாட்டால் காத்துகிடக்கும் எரிபொருள் கப்பல்கள்!

டொலர் தட்டுப்பாடு காரணமாக நாட்டை வந்தடைந்த எரிபொருள் கப்பல்களுக்கான கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கொழும்பு துறைமுகத்தில் சுமார் 3 வாரங்களாக எண்ணெய் தாங்கி நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள போதிலும், கப்பலுக்கான கட்டணத்தை இதுவரை செலுத்த முடியவில்லை.

அதுமட்டுமின்றி மேலும் 2 டீசல் கப்பல்கள் ஒரு வாரத்திற்கும் மேலாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த விடயம் தொடர்பில் எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சின் அதிகாரி ஒருவரிடம் வினவிய போது, ​​கப்பல்களுக்கான கட்டணத்தை செலுத்துவதற்கு டொலர்களை பெற்றுக்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியுடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

Previous articleயாழில் கோவிலை சுற்றி வழைத்த விசேட அதிரடிப்படையினர் : வெளியான காரணம்!
Next articleமுல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி!