முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலி!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குட்பட்ட முத்தையன் கட்டு பகுதியில் உழவு இயந்திரம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (13) மாலை முத்தையன் கட்டு எல்வி சந்தியில் இடம்பெற்றுள்ளது. உழவு இயந்திரம் வேகத்தை இழந்து மின்கம்பத்தில் மோதியது.

விபத்தில் படுகாயமடைந்த சாரதியை மக்களால் மீட்டு ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

32 வயதுடைய பெரியசாமி ராஜ்குமார் என்ற குடும்பஸ்தரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில், உயிரிழந்தவரின் சடலம் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான விசாரணைகளை ஒட்டிசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleடொலர் தட்டுப்பாட்டால் காத்துகிடக்கும் எரிபொருள் கப்பல்கள்!
Next articleஉயர்தர பரீட்சை மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!