மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பு; மகிழ்ச்சியை ஏற்படுத்திய தகவல் !

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 13 மணிநேர பகுதி நேர வேலைவாய்ப்பை வழங்க பல்கலைக்கழக ஆளும் அதிகார சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்திட்டத்தின் கீழ், ஒரு மாணவர் ஒரு மணி நேர வேலைக்கு 350 ரூபாய் பெறுவார்.

பல்கலைக்கழகத்தில் கல்வி சாரா சேவைகள் மற்றும் இணையம் மூலம் அறிவு பரிமாற்றத்தை வழங்க தற்காலிக வேலைவாய்ப்பு நியமனம் வழங்கப்படும் என துணைவேந்தர் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கையிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் முதன்முறையாக இந்த நடவடிக்கை அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசெயலிழந்து கிடக்கும் யாழ்.மாநகரசபையின் தீயணைப்பு பிரிவு!
Next articleஉருகுழைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 7 பிள்ளைகளின் தந்தை : வெளியான காரணம்!