வட்டுக்கோட்டையில் தோட்டத்தில் பூசணிக்காய் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் 40 கிலோ பூசணிக்காய் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தோட்டம் ஒன்றில் 40 கிலோ பூசணிக்காய் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தோட்டக்காரரால் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் வட்டுக்கோட்டையை அடுத்துள்ள மூளாய் பகுதியில் 40 கிலோ பூசணிக்காய் கிலோ 70 ரூபா வீதம் ஒருவர் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது பூசணிக்காய் விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Previous articleஅனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை : வெளியான அறிவிப்பு!
Next articleபெண் பொலிசார் குளிப்பதை தகரத்தை கழற்றிப் பார்த்த பொலிசாருக்கு நேர்ந்த கதி..