யாழில் விடுதலைப் புலிகளின் புதையலை தேடி அகழ்வு பணி ஆரம்பம்!

யாழ்ப்பாணம் இருபாலையில் உள்ள வீடொன்றில் தமிழீழ விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் புதையல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டில் புலிப் புதையல்கள் காணப்படுவதாக கோப்பாய் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து பொலிசார் புதையல் அகழ்வதற்கான அனுமதியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கோரினர்.

நீதிமன்ற அனுமதியுடன் இன்று அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதையல் அகழ்விற்காக கொழும்பில் இருந்து விசேட குழுக்கள் வருகை தந்துள்ளதாகவும், அகழ்வு பணிகளுக்காக கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleவவுனியாவில் மூன்று பிள்ளைகளின் தந்தை கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு..!
Next articleநாட்டில் தேங்காயின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!