வவுனியாவில் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்களால் பரபரப்பு!

நேற்றிரவு வவுனியாவில் தனியார் கல்வி நிறுவனமொன்றில் ஆசிரியர் ஒருவரை தாக்க முற்பட்ட மாணவர்களால் ஆசிரியர் அருகில் நின்ற மாணவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார்.

இதனால் தலையில் காயம் அடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று (16) மாலை வைரவபுளியங்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மாணவர்கள் அங்கு நின்றிருந்த மாணவிகளை துன்புறுத்த ஆரம்பித்துள்ளனர்.

இதனை அங்கு நின்றிருந்த ஆசிரியர் அவதானித்து தனது கல்வி நிலையத்திற்கு தொடர்பில்லாத மாணவர்களை அங்கிருந்து வெளியேறுமாறும் அவ்வாறான முறையில் நடந்து கொள்ள வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.

தனியார் கல்வி நிறுவனமொன்றில் கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 19 வயதுடைய மாணவன் காயமடைந்து வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சம்பவம் தொடர்பில் காயமடைந்த மாணவியின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleதங்கத்தின் விலைகளில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!
Next article7 நாட்களாக மாயமான பாடசாலை மாணவன்!