7 நாட்களாக மாயமான பாடசாலை மாணவன்!

கொட்டாவ பிரதேசத்தில் உள்ள 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கடந்த 7 நாட்களாக காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுவன் கடந்த 9ஆம் திகதி மதியம் 1.30 மணியளவில் மேலும் இரண்டு சிறுவர்களுடன் மஹல்வராவ பிரதேசத்தில் உள்ள தொலைபேசி நிலையத்திற்கு சென்றுள்ளார்.

பின்னர் மீண்டும் கொட்டாவ நகருக்கு வந்து பஸ்ஸில் மங்குபுர பகுதிக்கு செல்லும் சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பின்னர் பேருந்தில் கொட்டாவிக்கு திரும்பினார். எனினும் அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் சிறுவனை கண்டுபிடிக்க விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொட்டாவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Previous articleவவுனியாவில் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்களால் பரபரப்பு!
Next articleபாடசாலை நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் :வெளியான அறிவிப்பு!