வவுனியா ஓமந்தையில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் மரணம்!

வவுனியா ஓமந்தையில் குடும்பஸ்தர் ஒருவர் ரயிலில் மோதி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.

யாளியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் நேற்றிரவு 10 மணியளவில் ஓமந்தை, ஓமந்தை விளக்குவைத்த குளம் பகுதியில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் புகையிரத பாதையில் மோதியுள்ளது.

குடும்பத்தினர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், சடலத்தை புகையிரத திணைக்கள அதிகாரிகள் மீட்டு வவுனியா புகையிரத நிலையத்தில் வைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனையடுத்து சடலத்தை வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ள பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஓமந்தை விளக்குவைத்த குளம் பகுதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான எஸ்.நகுலன் என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

Previous articleபாடசாலை நேரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம் :வெளியான அறிவிப்பு!
Next articleயாழில் நூலிழையில் உயிர் தப்பிய பெண்கள்!