யாழில் நூலிழையில் உயிர் தப்பிய பெண்கள்!

யாழ்ப்பாணம்.வட்டுக்கோட்டை சந்தியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் அதிசயமாக உயிர் தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மாதக்கலையைச் சேர்ந்த சித்தி (வயது 39) மற்றும் மகள் பார்த்திமா (வயது 20) ஆகிய இருவரும் அராலியில் உள்ள தமது உறவினர் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் வாகனம் வட்டுக்கோட்டை சந்தியில் மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதனால், மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரு பெண்களும் காயமின்றி உயிர் தப்பினர். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் சாரதி வட்டுக்கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleவவுனியா ஓமந்தையில் புகையிரதம் மோதி குடும்பஸ்தர் மரணம்!
Next articleஇலங்கையில் எரிபொருளின் விலை குறைக்கப்படாமைக்கான காரணம் என்ன!