யாழில் புலிகளின் ஆயுதங்கள், நகைகளை தேடி நடத்தப்பட்ட அகழ்வு பணியில் ஈடுபட்டவர்களுக்கு கிடைத்தவை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி யாழ்ப்பாணம் இருபாலையில் மேற்கொள்ளப்பட்டு வந்த பாரிய அகழ்வுப் பணிகள் இன்று பிற்பகல் நிறுத்தப்பட்டுள்ளது.

இருபாலை டச்சு வீதியிலுள்ள வீடொன்றின் வளாகத்தில் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து 6 பேர் அகழ்வு பணிகளுக்கு தயாராகி வருகின்றனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ராணுவ வீரர்களும் அடங்குவர்.

குறித்த வீட்டில் புதையல் தோண்டுவதற்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் அனுமதி கோரியிருந்தனர்.

நீதிமன்ற அனுமதியுடன் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அகழ்வு பணி மேற்கொள்ளப்பட்டது.

புதையல் அகழ்விற்காக விசேட குழுக்கள் வந்திருந்த வேளையில் கனரக வாகனங்களும் அகழ்வுப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டன.

பிற்பகல் 2 மணி வரை யாழ்.நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதும் எவ்வித பொருட்களும் மீட்கப்படவில்லை

அகழ்வாராய்ச்சி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.