தாமரை கோபுரம் ஊடாக மூன்று நாட்களில் கிடைத்த வருமாணம் : அதிர்ந்து போன அதிகாரிகள்!

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தின் மூலம் மூன்று நாட்களில் மொத்தம் 7.5 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது.

தாமரை கோபுரம் திறக்கப்பட்ட இந்த மூன்று நாட்களில் சுமார் 14,000 பேர் பார்வையிட்டுள்ளனர்.

கொழும்பு தாமரை கோபுர நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

தாமரை கோபுரத்தை மக்கள் பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்ட நேரமும் சனிக்கிழமை (17) முதல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி மதியம் 12:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை தாமரை கோபுரத்தை மக்கள் பார்வையிடலாம்.

எனினும், அனுமதி அட்டைகள் இரவு 10 மணி வரை மட்டுமே வழங்கப்படும் என ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

Previous articleதூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவன் : சோகத்தில் தந்தை எடுத்த விபரீத முடிவு!
Next articleமட்டக்களப்பில் மீட்கப்பட்ட விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் : தீவிர விசாரணையில் பொலிஸார்!