சட்டவிரோதமாக ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொண்ட இலங்கையர்கள் : அஜர்பைஜானில் மடக்கிப்பிடித்த பொலிஸார்!

அஜர்பைஜானின் பெய்லாகன் மாவட்டத்தில் உள்ள பிரிஞ்சி ஷஷேவன் கிராமத்திற்கு அருகில் ஈரானுடனான எல்லையை கடக்க முயன்ற நான்கு இலங்கை இளைஞர்கள் அஜர்பைஜான் எல்லைக் காவலர்களால் தடுத்து வைக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜைகள் டோஹா மற்றும் டுபாயில் இருந்து பாக்கு, அசர்பைஜான் ஆகிய பகுதிகளுக்கு வந்துள்ளதாக அந்த சேவை தெரிவித்துள்ளது.

ஈரானின் எல்லை வழியாக, கடப்பவர்கள் துருக்கிக்குச் செல்ல விரும்புவதாகவும், அங்கிருந்து – ஐரோப்பிய நாடுகளில் ஒன்றிற்குச் செல்ல விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேற்றத்தின் வழியைக் கண்டறிய விசாரணைகள் நடைபெற்று வருவதாக ஊடகங்கள் மேலும் தெரிவித்தன.

Previous articleகாணாமல் போயுள்ள 16வயது பாடசாலை மாணவன்!
Next articleஇலங்கையர்களுடன் காணாமல் போன படகு ! : அவர்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலில் அதிர்ச்சியடைந்ந அதிகாரிகள்!