இலங்கையின்5 ஆண்டுகள் சாதனையை முறியடித்த யாழ் இளைஞர்!

ஆண்களுக்கான கோல் பாய்ச்சல் போட்டியில் இலங்கையின் 5 வருட சாதனையை யாழ்ப்பாண இளைஞர் அருந்தவராசா-புவிதரன் முறியடித்துள்ளார்.

தற்போது புவிதரன் (சவகச்சேரி இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவர்) இருக்கின்ற கோலானது 4.80 அல்லது 4.90 மீட்டர் உயரத்தை தாவுகின்ற அளவைக் கொண்ட கோலாகும்.

எனவே அந்த கோலின் உயரம் இலங்கையின் சாதனையை முறியடிக்க போதுமானதாக இல்லை. அதுமட்டுமின்றி தற்போதைய சந்தையில் கோலா ஒன்று 5 இலட்சம் ரூபாவாக இருப்பதால் அதனை வாங்குவதற்கு பூவிதரனுக்கு வசதியில்லை.

எனினும் நேற்றைய பயிற்சியின் போது இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த கோலூன்றிப் பாய்தல் வீரர் சன்ன பெர்னாண்டோவின் கோலைக் கொண்டு புவிதரன் பயிற்சிகளை மேற்கொண்டார்.

இதேவேளை, இன்றைய போட்டியின் போது சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் முன்னாள் மாணவர் புவிதரன் தனது கோலின் மூலம் 5 வருட இலங்கை சாதனையை முறியடித்துள்ளார்.

Previous articleசற்று முன்னர் மகாராணியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி ரணில்!
Next articleதிரையரங்குகளில் ஒளிபரப்பப்படும் இரண்டாம் எலிசபெத்தின் இறுதி சடங்கு!